பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

23


நயவஞ்சகத்தால் காட்டாண்மை கொள்வோரும் மக்கள் விரும்புகிற ஒன்றையே செய்து மகுடங்தரிப்போரும் அதிக மாக உற்பத்தியாவார்கள். ஆனால் மக்கள் அறியாமல் கொண்டிருக்கின்ற எண்ணத்துக்கெதிராகப் பிாசாரம் செய்து அவர்கள் மடமையை நீக்கவல்ல ஆற்றல் பெறுவோர்கள் மாஜினியைப் போல எங்கோ ஒரு சிலர் தான். அவர்கள் ஆ ற் ற லே ப் பயன்படுத்திக்கொள்ளாத காடு பாழான நாடு தான் என்றாலும், இத்தாலி ஒரளவுக்கு அவன் சொல்வழி நடக்கத் தயாராய் விட்டது. இந்த நிலையைச் சரியாகவும் தனக்கும் காட்டுக்கும் சாதகமாகவும் பயன்படுத்திக்கொண்டு பல மான அஸ்திவாரம் போடத் தீர்மானித்துவிட் டான். ஏனெனில், மக்கள் சார்பாகத் தான் எதிர்ப்துப் போராட ப் போவது பழமையையல்ல பாராளுமன்றத்தை பாராளும் மன்னர்களே, சட்டத்தை, சர்க்கரைச் சந்திக்கிழுக்கப் போகின்றன். அதுவும் சமாதான மேடையிலல்ல, சமர்க்களத்தில். படை பலம் கொண்டல்ல, பண பலம் கொண்டல்ல,.வாள் பலம் கொண்டல்ல, வாய்பலம் கொண்டே அதுமட்டுமா? மக்கள் ஒற்றுமை, உணர்ச்சி என்ற உத்வேகத்தைக் கொண்டு. சாதாரணமான காரியமல்ல. சாவே வா! என்றதைப்போன்ற விஷ விளையாட்டு. ஒருவேட்டு சப்தத்தைக் கேட்டு ஊரே கதவையடைத்துக்கொண்டால், தான் ஒருவனே நடுத்தெருவில் நின்று, வேந்தன் விரட்டும் வேட்