பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

சாய்ந்த கோபுரம்


டை நாய்களுக்கோ, வீரர்கள் ஏறிவரும் குதிரைகளின் காலடிகளுக்கோ, அவர்கள் கையிலிருந்து குறிபார்க்கும் துப்பாக்கிக் குண்டுகளுக்கோ குப்புற விழுந்து சாக வேண்டி வந்தாலும் வரும். எனினும் துணிந்து விட்டான்.

உறுதி

“தொழில் எவ்வளவு கேவலமானதாக அருவறுப்புள்ளதாக இருந்தாலும் அதைச் செய்வதில் அவமானமில்லை, சோம்பல் ஒன்று தான் அவமானம்” - என்று ருஷ்ய அறிஞர் டால்ஸ்டாய் சொல்லியதைப் போலத் தான் செய்யப் போகும் காரியம் எவ்வளவு பயங்கரமானதாக இருந்தாலும் அதற்காக, அவன் அவமானப்படவில்லை. நாட்டுக்காக ஏதாவது தன்னாலியன்றதைச் செய்யாமல் விட்டால் தான் அவமானம் என்று கருதி அந்தத் தீ விளையாட்டில் குதித்தான். ஏன் ? எவன் தன்னுடன் பிறந்த மக்களுக்குத் தொண்டுசெய்கின்றானோ அவனே பக்தன். அவன் இதயமே கடவுள் தேடிச் சென்று அமரும் சிம்மாசனம் என்ற சித்தாந்தத்தையுடையவன் மாஜினி. ஆகவே அவன் எந்தவிதப் பயனையும் கருதாமல், எந்த எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் தியாகத் தீயில் குதித்து விட்டான்.

“சோம்பலும், சோர்வுமாக நூற்றாண்டுகள் உயிர்வாழ் வதை விட, பெருமுயற்சியோடு ஒருநாள் வாழ்ந்திருப்பதே மேல ” என்ற புத்தர் பொன்மொழிக் கொப்ப.