பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

சாய்ந்த கோபுரம்


ஆராய்ச்சி

ஒவ்வொரு நிறத்தின் தன்மையையும் குணத்தையும் ஆராயத்தலைப்பட்டான். செந்நிறத்தை நினைத்தான். உடனே அபாய அறிவிப்பு என்ற எண்ணம் உதித்தது. நமக்கும் சமூகத்துக்கும் ஒரு சிலர் அபாயத்தை விளைவித்துக் கொண்டிருக்கும் போது நாம் யாருடைய கண்களுக்கும் அபாய அறிகுறியாகத் தென்படக்கூடாது. எனத் தீர்மானித்து அந்த நிறமணிந்த சின்னத்தை அணிவதைக் கை விட்டான். இரண்டாவதாகப் பச்சை நிறத்தை எண்ணினான். அது பரவசத்தோடு பலரை வரவேற்கும் நிறந்தான். எனினும், சூது நிறைந்த பயங்கர உலகில் நமக்குப் பரவசமேது? உலகம் ஓர் பாழ் மண்டபம். மனிதஜீவன் அதில் ஓர் பச்சைக்கிளி. பழங்களேது அங்கே? ஆகவே பரவசமேது வாழ்வில்? அதனால் பச்சை நிறத்தையும் கைவிட்டான். அடுத்தது நீல நிறத்தை நினைத்தான். காதலர் மகிழக் களிப்பைத்தரும் நிறமும், பன்னெடுங்காலங்களாக வாடும் பயிரினங்கள் வானத்தை நோக்கும்போது, ‘கவலை வேண்டாமெனச் சொல்லும் கார்மேகங்கள் கொள்ளும் நிறமல்லவா அது? அதனாற்றான், “எத்தனையும் வான் வறண்ட காலத்தும் பைங்கூழ்கள் மைத்தெழுந்த மாமுகிலே பார்த்திருங்கும் மற்றவை போல்” என்று அறிஞர்கள் பாடியுள்ளார்கள். ஆனால் நாம் யாரைப்பார்த்துக் கவலை வேண்டாமெனச் சொல்லப் போகின்றோம்? இன்று நமக்கேது அந்த நிலை? ஆகவே அந்த நீலநிறமும்