பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

27


வேண்டாமென முடிவு கட்டினான். அடுத்தது காவி திறத்தை எண்ணினான். குடும்பத்தைப் பரிபாலிக்கத் திறமையற்றவர்களுக்குப் பாதுகாப்புத் திரையாக அமைந்த நிறம். காதலியை, கண் போன்ற மக்களை, அன்பால் ஆரத்தழுவும் ஆற்றல் இருந்தவரையிலும் அணைத்து, அது முடியாதபோது ஆண்டவன்மேல் பழிபோட்டு ஆரணியம் நோக்கி நடக்கும் அற்பர்கள் அணியும் நிறமது. எதிர்த்து நிற்கும் பயங்கா சக்திகளை எதிர்த்து நிற்க ஆற்றலற்று, அரனடியார்கள் எனப் பாசாங்கு செய்து காஷாயமுடுத்திக் கமண்டல மேந்திய கபடவேட சன்னியாசிகள் அணியும் நிறமது. இன்பத்தைச் சுவைத்துப் பின், இவையெல்லாம் மாயையெனப் பேசி எட்டாத மோட்சத்திற்குக் குடிபுக எண்ணும் மடமைக் குடிலர்களின் நிறமது: மன்பதைக்கு மாயாவாதங் காட்டி, மனித சமூகத்தைச் சித்திரவதை செய்து, தண்டு, கமண்டலம், தண்டகாருண்ணியம் என்றெல்லாம் ஏமாற்றும் எத்தர்களின் கைமுதல் வந்த நிறம். ஆன்மா ஆண்டவனோடு ஐக்கியமாய் விடுகிறது. இந்த அற்ப உடல் அணங்குகளோடு உலக சிற்றின்பத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கின்றது. உடலுக்கும் ஆன்மாவுக்கும் ஒருவித சம்மந்தமுமில்லை. உடலுக்கும் ஆன்மாவுக்கும் உள்ள தொடர்பு, புளியம்பழத்திற்கும், அதன் மேலுள்ள ஓட்டுக்கும் உள்ள தொடர்பைப் போன்றதுதான் என்று கற்புள்ள மங்கையரைக் கற்பழித்துக் காவலில் திண்டாடி வழக்கு மன்றமேறி வாதாடித் தன் மானத்தைக் காக்கும்படி, வக்கீல் காலில் விழுந்து மான-