பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி.பி. சிற்றரசு

29


லாத மங்கல் நிறம். ஆகவே அதுவும் கூடாதெனக் கைவிட்டான். நெடுநேரம் சிந்தித்தான் சிறையில் மாஜினி. முடிவு காணாமுன்னம், தங்களுக்கு விடுதலை, என்ற ஏடேந்திய சிறையதிகாரி வந்துநின்றான் எதிரில் “தண்டணை நாட்கள் முடியவில்லையே, இதற்குள் விடுதலையா?” என்றான் சிறைக் கைதி மாஜினி. பாவம், குற்றம் புரிந்தவர்களைத்தான் சிறையில் போடுகின்றார்கள் அரசாங்கத்தார் என்று அதுவரை தவறாக நினைத்துக்கொண்டடிருந்தன் போலும். ஒருவன் கெட்ட பொருளைக் கொஞ்சம் மலிவான விலைக்குச் கேட்டாலே சிறையில் போடவேண்டிய அளவுக்குப் பல சர்க்கார்கள் தோன்றியிருக்கின்றன என்று 19-வது நூற்றாண்டில் வாழ்ந்த மாஜினிக்கு எப்படித்தெரியும்?

சிறை

குற்றங்களை விசாரித்த பிறகுதான் சிறையில் தள்ளுவது என்ற முறை மாறி வெகு நாட்களாய் விட்டன பனிக்கோ, குளிலுக்கோ பயந்து முக்காடு போட்டுக்கொண்டு போனாலே போதும். உடனே பாரிசு சிறைதான். தன் கட்சிக்கு விரோதி, சந்தேகப்பிராணி, இரவில் திரிந்தால், யாராவது அவன் மேல் மொட்டைக் கடிதம் எழுதிவிட்டால் சிறைதான். வழக்காட உரிமையில்லை. இவ்வளவு நாட்கள் தான் சிறையில் இருக்கவேண்டும் என்ற வரையறையுமில்லை. பேச்சுரிமை, எழுத்துரிமை, எண்ண உரிமை, தொழ-