பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

சாய்ந்த கோபுரம்


உரிமை என்றெல்லாம் சர்க்காரின் பேனாவும், தாளும் பேசும். ஆனால் யாராவது பேசு எழுந்தால் சர்க்காரின் துப்பாக்கிகள் பேசும்; பாவம் இது தெரியாதவர்கள் எண்ணற்றவர்"சிறையில் வாடி வதங்கியிருக்கின்றார்கள். இதைத் தெரிந்துகொள்ள முடியாத காலமல்ல மாஜினி காலம். ஆனால் அவன் தெரிந்துகொள்ள வேண்டிய சூழ்நிலையின் முதற்படியாக இப்போதுதான் சிறையிலே இருக்கின்றான். அதுவும் காலம் முடியா முன்னம் விடுதலை தரை நோக்கிச் சிந்தித்துக்கொண்டிருந்த தன்மானத் தொண்டன், இதைப்போலக் கேட்டபடியே கலை நிமிர்ந்தான். 'விடுதலை' என்ற உத்திரவைக் காட்டினான் வாளேந்தி. "என்மேல் அரசாங்கம் காட்டிய கருணையா" என்றான் கர்மவீரன். "இல்லை?, குற்றம் ருசுவாகவில்லையாம், அரசாங்கத்தின் ஆத்திரவிளைவு தான் தாங்கள் அந்தகாரச் சிறையில் தள்ளப்பட்டதற்குக் காரணம். ஆசையால் விடுதலையாம், இதோ! அரசாங்கத்தின் முத்திரையிட்ட ஆணை" என்றான் காவற்காரன்.

விடுதலை

"குற்றம் ஒன்றிருந்தாலல்லவா ருஜுவாக முடியும்? என்னை உள்ளே தள்ளிய பிறகு ஏதாவது ஒரு குற்றம் என் நிழல்பட்டிருக்கிறதா என்று பார்த்திருப்பார்கள். எங்கே கிடைத்திருக்கப்போகின்றது? இவனுக்கேன் அரசாங்கப் பொது நிதியிலிருந்து தண்டச்