பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

சாய்ந்த கோபுரம்


நாடு கடத்தல்

வெளியே பத்தடி நடந்தான். மீண்டும் ஓர் உத்தரவு. என்ன அது? மாஜினி கேட்கின்றான். விடுதலைதான், என்றாலும் தாங்கள் பிரான்சு நாட்டு எல்லையில் இருக்கக் கூடாது, “இது தான் இந்த மறு உத்திரவு.” “அதையே தான் நாலும் விரும்பினேன்.” சிந்திக்க நேரம், திட்டந் தீட்ட ஓய்வு, ஒன்று சேர்க்க உறுதி, இவ்வளவு வசதியை அளித்திருக்கிறது இந்த மறு உத்திரவு. மிகமிக நன்றி என்று சொல்லுங்கள். நானும் இதோ மார்சேல்சுக்குப் போகிறேன்’ என்று வழிநடந்தான். முதல் பரீட்சையில் தேறி விட்டான். எனினும் எதிர்காலம் மிகப் பயங்கரமானதாகக் காணப்பட்டது. காரணம், இத்தாலிய மக்கள் எதற்கெடுத்தாலும் சந்தேகப் பிராணிகள். போப்பாண்டவர் உத்திரவு கேட்காமல் புகைபிடிக்கவுமாட்டார்கள் என்று சொல்லுமளவுக்குப் புத்தியைப் புறம்பாக ஓட்டியிருந்தார்கள். இப்படிப் பழகிப் போன மக்களை ஓர் புதுப்பாதைக்கிழுப்பதென்பது கடினமான காரியங்தான். என்றாலும் செய்து தீர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது நாடு. வேறு வழியில்லை. வேற்றரசாங்கத்தின் வேல் விலாவைக் குத்துகிறது. இந்த சிந்தையில் வழிநடந்தான் அன்று அவன் நடந்த பாதை கல்லும், முள்ளும், கள்ளியும், புல்லும் நிறைந்ததாகவே காணப்பட்டன. எதிர்நோக்கிவரும் யாரையும் காண அவன் மனம் இடந்தரவில்லை. சுதந்திரச் சூறாவளியே அவனைச்