பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

33


சூழ்துகொண்டது. அன்று தொடங்கி மாஜினி ஒரு தூங்கும் எரிமலையாய்விட்டான். தன் உரத்த குரலில் உதவாக்கரைகளுக்கு ஓர் எச்சரிக்கை விட எண்ணினான். ஆயினும் காலம் கனியவிலை “காலங் கருதிக் காத்திருப்பர் கலங்காது ஞாலங் கருதுபவர்.” என்ற பொதுமறை தந்த பொய்யாப் பெருந்தகை வள்ளுவன் வாக்கிற்கிணங்கக் காலத்துக்காகக் காத்துக்கொண்டிருந்தன்.

காரணமென்ன?

இவன் இவ்வளவு ஆவேசப்படுவதற்குக் காரணமென்ன? 19 வது நூற்றாண்டின் இடைக்காலம். பிரான்சு, ஜெர்மனி, ஆஸ்டிரியா என்ற மூவலைரசுகளும், இத்தாலியை, ரோம், நேபில்ஸ், மிலான என்ற மூன்று கூறாக்கி, மேற்சொன்ன மூவல்லரசுகளும் அடக்கியாண்டது தான் மாஜினி சீறி எழுந்ததற்குக் காரணம் அயல் அரசை நீக்கவேண்டும் என்ற அதுதான் அவன் ஆசை. அங்க அரசுகள் இடும் கட்டளைக்கு அடங்கி நடக்க முடியாது. இதுதான் அவன் கொண்டிருந்த ஆத்திரம். தன் தாயகத்தின் செல்வர்கள் வேற்றரசுக்கு வெண்சாமரம் வீசுகின்றன என்ற இதுவே அவனடைந்க வேதனை. அந்தப் பேரரசை வல்லரசுகள் காட்டிய அடிமை முறிச்சீட்டில் கண்மூடிக்கொண்டு கையெழுத்திட்டு விட்டனர் கனதனவான்கள். பாரீஸ் நகர சீமாட்டிகள் இவர்கள் மனத்தைப் பேதப்படுத்தி விட்டார்கள். இதுதான். இவன் கொண்ட கோபத்திற்குக்