பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

35



எந்த நாட்டாரும் தன் நாட்டைக் கடவாமல் கோடிக் கணக்கான பணம் செலவுசெய்து மாகிறே அரண் கட்டிக்காத்த பிரான்சு நாடு தன் நாட்டை மயானக்காடாக்குவதை எண்ணி மனம் புழுங்கினான். அழகே உருவான அணங்குகள் நடன மாடிய, பாரீஸ்நகரைத் தலைநகராகக் கொண்ட பிரான்சு தன் நாட்டை எலும்பும் தோலுமாயாக்குவதை எண்ணி எண்ணி நலிந்தான் மாஜினி. வீரர்கள் நடமாடிய இடம் வெம்புலிகள் நடமாடும் கானகமாய் விட்டதை எண்ணி மனம் உடைந்தான். பிரான்சின் மேல் குற்றமில்லை. அது வைத்திருந்த பாஸ்டில் சிறை உலகிலேயே மிகப் பயங்கரமானது.

அது இடியோசையைக் கேட்ட அரவம்போல் இருந்த மக்களை, ஏன் என்று கேட்கச் செய்தது. இரத்தம் வழிய வழியக் கசைகொண்டடித்த கல் நெஞ்சரின் கைக்கசையின் முழக்கம், ஏழையின் அபயக் குரலை அடக்கிவிட்ட அக்ரமத்தை அளவு கடடது அனுபவித்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியால் செல்வச் செருக்கரைச் சமர்க்களத்தில் சந்திக்கச் சங்கநாதம் செய்யவைத்தது சாதாரண மக்களையும் அந்தச் சிறைச்சாலை.

மாடியில் மதியில்லா மந்திரியும், அறிவில்லா அரசனும், ஆராய்ச்சி அனுபவம், அரசியல் நேர்மை எள்ளளவேனும் இல்லாத தலையாட்டிகளும், இருந்தும் இரும்புச் சிலைபோல் வாயைத் திறக்காதிருந்த வயோதிகப் பிண்டங்களும், மக்கள் புரட்சியை