பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

சாய்ந்த கோபுரம்



அடக்குவதெப்படி? என்ற புதிய, ஆனால் உருப்படாத உதவாக்கரைத் திட்டத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கின்றனர்.

வெளியே வேதனைக் குரல் மாளிகையின் பக்கத்திலேயே மருந்துக்கிடங்கு தீப்பற்றி வெடிப்பதைப் போல அனுதாபமுள்ள ஒருவன் அபாயத்தை விளக்க ஓடோடி வருகின்றான். வந்த ஆள் வாய் திறப்பதற்குள், "என்ன கூச்சல்? என வெடித்த குரலோடு வினா வெழுப்புகின்றான் வேந்தன். அது மனித நாய்களிடும் சாதாரணக் கூச்சல் என்கிறான் பக்கத்திலிருக்கும் சீமான்." அப்படியானால் அந்தச் சாளரக் கதவுகள மூடு, சத்கங் கேட்காது என்கிறான் கொற்றன். அவைகளை மூடுவதால் சத்தங் கேட்காமலிருக்கலாம். ஆனால் நாளை செங்கோல் தங்கள் கையில் தங்க வேண்டுமே என்கிறான் பச்சாதாபமுள்ளவன், பணிவான குரலோடு. அப்படியானால், அதோ 'பாஸ்டில்' என்ற ஒரே பதில் என்கிறான் வேந்தன். மீண்டும் திட்டம் தீட்டும் வேலையில் தீவிரமாக ஈடுபடுகின்றனர்.

பாவம்! அவன் அறியான், அந்தக் குரலில் வேதனை, வறுமை, நோய் மயக்கம், பசி, தாகம், பஞ்சம் ஆகிய அவ்வளவும் கலந்திருக்கின்றன வென்று. ஆகையால் பரிகசித்தான். ஐனத்தொகையில் பாதித் தன்தாள்பணியும், என்றெண்ணினானேயன்றி உலகநீதி அவன் உடலை இருகூறாக்கும் என்று எண்ணவே மறந்து விட்டான்.