பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

சாய்ந்த கோபுரம்



"பாவத்தின் விதை" எனப் பல்லோரால் பரிகரிக்கப்பட்ட இடம் அது. அதனுள் போய்த் தண்டனையை அடைந்துவிட்டு வெளியே வந்தவன் மனிதனா, என்று பலர் பரிகசிக்கத்தக்க நிலையில் பாதகர்கள் ஒன்று சேர்ந்து அவர்கள் ஆடம்பர வாழ்க்கை என்ற எஃகுவால், கடின மனமென்ற கற்களால், சுயநலமென்ற சுண்ணாம்பால், ஏளனப் பார்வை இருமாப்பு என்ற இரும்பு உத்திரங்களால் கட்டப்பட்டது பாஸ்டில் சிறை.

அது அநேகர் உதிரத்தை உறிஞ்சி உயிரைக் குடித்த சவக்கிடங்கு. வாலிபப் பருவத்தில் முறுக்கு மீசையோடு உள்ளே சென்று வயோதிகனாய் வளைந்த முதுகோடு அடையாளம் தெரிந்து கொள்ள முடியாமலே அனேகர் வெளியே வந்ததுண்டு. இருக்கும் இடத்திலிருந்து இன்னும் ஒரு அடியும் நகரமுடியாதென்று தெரிந்த பிறகே அவ்வண்ணம் இருந்த அநேகர் விடுதலை யடைந்திருக்கின்றனர்.

வெளியே வந்தவர்களுக்குக் கிடைக்கவேண்டிய பொருள் ஒன்றே ஒன்றுதான் மிகுதியாக இருக்கும். அதுதான் அவனுக்காக அந்த நாட்டு அரசாங்கம் பத்திரமாகக் காப்பாற்றி வைத்திருக்கும், உலக விடுதலை (மாணம்). அந்த நிலையில் மூச்சை மாத்திரம் அவன் உடலில் வைத்து வெளியே தூக்கி எறிந்தனர் பலரைச் சிறை யதிகாரிகள். கொடுமை கோரத்தாண்டவம் புரிய நாட்டாண்மை நடனம்புரிந்தது.