பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

39



ரகசிய கூட்டங்கள் பலவிடங்களிலே நடக்கும். அதன் முடிவாக, 'உரிமை' என்ற முழக்கம் ஒரு பக்கம் கேட்கும். “அது. ராஜத் துரோகம்”, என்ற பதில் வரும் ஒரு பக்கம். உரிமை என்று முழங்குவது ராஜத் துரோகமானால், உரிமை என்ற வார்த்தை அகராதியிலேயே இருக்க வேண்டியதில்லை யல்லவா? உழைப்பு உறிஞ்சப்பட்டு, வாழ்வு வறண்ட பாலைவனமா சுகப்படும் போது, உரிமை, உரிமை என்ற வேதனைக் குரல் கேட்கின்றது.

இந்த வேதனை, உள்ளங்கள் உறுமிய உறுமலால் பிரான்சு நாடே அதிர்ந்து கொடுத்தது. பண மூட்டைகள் மத்தியிலே பரபரப்பும், செல்வர்கள் வீட்டிலே சோகப் பார்வையும் முதலில், பிறகு செருக்கு, அதிகாரிகள் வீட்டிலே அதட்டல், ஆணவ நடை அளவு கடந்த மமதை, தங்களைக் காப்பாற்ற எங்கும் நிறைந்ததாய், ஏகபராபரமாய் உள்ள பாஸ்டில் சிறை, பயமில்லை என்ற ஆறுதல், பிரான்சின் மத்தியிலே இச் சிறையிருந்தது. கல்லர்கள் கண்களில் ஒரு வழிப்போக்கன் அகப்பட்டதைப்போல, காமுகர் மத்தியிலே ஒரு கட்டழகி இருந்ததைப் போல தேனீக்கள் மத்தியிலே ஒரு தேன்கூடு இருந்ததைப் போல, கூட்டின் மத்தியிலே ஒரு சிலந்தி இருந்ததைப் போல இருந்தது. இந்த பாஸ்டில் சிறை செல்வர்களுக்கு ஓர் பாதுகாப்பாய்,

பரிதாபம்! சிறைச்சாலை என்ன செய்யும்? நிரபராதிகளையும் குற்றவாளிகளையும் அடைத்து வைத்திருப்பதால் சிறைச்சாலை என்கிறோம். அங்கே நீதி