பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

சாய்ந்த கோபுரம்



பனைக்கே எட்டாத சோகமிக்க சிறைச்சாலையை எளிதாக்கினான் வால்டேர். ஏளனம் செய்தான் ரூபாஸா. எழுத்து ஈட்டிகளால் தாக்கினான். "யூகோ, வீணையின் நரம்புகளைத்தடவி, சமூகத்தின் நரம்புகளை இரும்பாக்கினான் ராகின்.

இங்கே தான் பாஸ்டில் இருந்தது ஒரு காலத்தில் என்று சொல்லுமளவுக்கு இடித்துத் தூளாக்கித் தரைமட்டமாக்கி அதன் மண்ணைத் தண்ணீரில் கலக்கினார்கள். அதிலும் வேடிக்கை அப்படிச் சொன்ன அறிஞன் வால்டேர். இறந்த பதினான்கு ஆண்டுகட்கு பிறகு, அவ்வளவு போர் நடத்திய பிரான்சு தன் நாட்டை அடிமை கொண்டிருப்பதை எண்ணவே வெட்கப்பட்டான் மாஜினி.

ஜெர்மனி

பிரான்சே அப்படி என்றால், ஜெர்மனியைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? அது பல வகையான நிபுணர்கள் தோன்றிய இடம். பொதுவுடமைத் தந்தையும் மண்பொது விதியைத் திருத்தித்தந்த பெரியோனுமான காரல்மார்க்ஸ் பிறந்த ஜெர்மனி, வறுமை வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்ட வையகத்திற்குப், பஞ்சத்தால் மூழ்கிப்போன பாருக்குத் தொல்லையால் சோர்ந்துபோன தரணிக்கு நல்லதோர் அரசியல், பொருளாதார சமுதாய இயலை இயம்பி, இன்னலுற்ற மக்களை இன்புற வைக்கும் தனிமான்பு. தனிச் சிறப்பு, தனிப்பீடு ஜெர்மன், காரல் மார்க்சுக்கு உரியது. அவர் அக்