பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

43



காலத்து உயர்ந்து ஓங்கிய பகுத்தறிவியலைப் பருகி முன்னேற்றவாதியாக விளங்கினார். அவர் காலத்து ஆங்கில நாட்டில் நல்ல தனியறிவுடையவனெனத் திகழ்ந்த எஞ்சில்ஸ்சின் நட்புப் பெற்றமையாலும், பாபர்ட் ஓவனால் தோற்றுவிக்கப்பட்ட ஆங்கில சோஷியலிஸ்டு இயக்கத்தாலும் மார்க்ஸ் அவர்கள், தங்கள் பொருளாதாரத் திட்டத்தைப் பெரிதும் பெருக்கினார். இது தான் மார்க்கசீயத்தின் இயல். இவரின் திரண்ட ஆராய்ச்சி, இவர் காலத்திலிருந்த எக்லின் அளவைப்பொருளியலைப் (Dialectical materialism) அடிப்படையாகக் கொண்டது. அதாவது உடன்பாடையும், எதிர்மறையையும் தோற்றுவித்துக் கடைசியில் அழியும் நிலை எய்துவதே மேற்படி கொள்கை.

சமுதாய அரசியலின் குறிகோள் பொருளாதாரம் என்ற பேருண்மையை உரைத்த தனிச் சிறப்பு காரல்மார்க்சுக்கே உரியது. ஒன்றின் மதிப்பு உழைப்புப் பற்றியதென்ற உண்மையைப் பார்க்க பெருமை காரல்மார்கசுக்கே உரியதாகும். முப்பது ஆண்டுகளாக உழைத்து ஆராய்ந்து, புதிய நடைமுறைக்குரிய, என்றும் எற்கவல்ல, சிறந்த சமூக அமைப்பு முறையை அவனிக்களித்த பெருந்தகை பிறந்த நாடு, தன் நாட்டைத் தலை குனயவைப்பதை எண்ணி மனம் கசிந்தான் மாஜினி.

அதுமாத்திரமல்ல பேரறிஞர் நியூடன் திண்பொருள் ஆராய்ச்சிக்கும் தகவுடைய டார்வின் மனிதன் தோற்ற ஆராய்ச்சிக்கும் அரண் செய்தது. நலிந்து