பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

சாய்ந்த கோபுரம்



குலைந்து, சிதைந்த மக்களினத்திற்குப் புதியதோர் சக்தியை அளித்தது. இவர் தம் ஆராய்ச்சியால் சமூகம் உயர்வதற்குரிய காரணம் உலகம் கண்டது. சமூக நிலையையும், பொருளாதாரத்தின் நிலையையும் அளந்தறிய மார்க்கசீயம் உதவுகிறது. ஓரிடத்தில் செல்வம். திரண்டும், மற்றோரிடத்தில் வறுமைதிரண்டும் விளக்குவதற்குரிய ரகசியத்தை விளக்கமாகத் தெரிவிப்பது மார்க்கசீயந்தான். பாரில் தோன்றும் பல்லுயிர் பசியற்று வாழ வேலையளித்து, உணவளித்து, உடையளித்து, வீடளித்து , உயர்வுற வைக்கும் மாண்புடைக்கொள்கையை மண்ணுலகிற்கு முழக்கி, மூலதனம், என்ற உயரியநூலை உலகிற்களித்த உத்தமன் பிறந்தநாடு தன் நாட்டை நடைப்பிணமாக்குவதைச் சொல்லிச் சொல்லிச் சோகமுற்றான்.

பல்லாண்டு உழைத்துப் பலதிட்டங்களை வகுத்து அவர் மறைந்த பின்னரும் 18 கோடி மக்கள் உல்லாச வாழ்வு வாழவைத்த சிந்தனையாளன் தோன்றிய தாயகம் தன் தாயகத்தைத் தரைமட்டமாக்குவதை எண்ணித் தளர்ந்து போனான், கெந்தே போன்ற கவிகள் பிறந்த பொன்னாடு. பிஸ்மார்க் போன்ற பிற்போக்கு வாதிகள் பிறந்த நாடு, யூதர்களைக் கொழுக்க வைத்த இடம், பொய்யர் சங்கம் அமைத்து, மெய்யைத் திணறவைத்த நாடு ஜெர்மனி. பொய்யை மெய்யாக்கும் புனிதப் பணியில் ஈடுபட்ட நரசீச இயக்கம் தோன்றிய ஜெர்மனி, வான் ஹின்டன் பர்க் போன்ற வல்லவர்கள் தோன்றிய