பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

45



ஜெர்மனி, இரத்த வெறி பிடிப்பதிலும் தன் நாட்டை நலிய வைப்பதிலும் ஆச்சரியமில்லை என்று எண்ணி ஆறுதலடைந்தான் மாஜினி.

ஆஸ்டிரியா

நெப்போலியன் நீதி வழங்க வீற்றிருக்கிறான் நீதி வழங்க என்பதற்குப் பதில் பழிவாங்க என்றால் பொருந்தும். கூண்டிலே ஏற்றப்பட்டான் குற்றவாளி எனக் கருதப்பட்ட நுாரம்பர்க் புத்தக வியாபாரி ஜோஹென்ஸ் பிலிப்பாம்.

குற்றம்

ஜெர்மன் ஆஸ்டிரியாவுக்த நெப்போலியனால் அடிமையாக்கப்பட்ட பிறகு, அந்த அவமானத்தை சகிக்காத நூரம்பர்க் ஆசிரியன் ஒருவன் "ஜெர்மனியின் சகிக்க முடியாத அவமானம்' என்ற தலைப்பில் துண்டு அறிக்கை ஒன்றை அச்சடித்து வெளியிடத் தூண்டினான். அதைத் தெருக்களிலே வழங்கியவன் தான் மேலே சொன்ன நுாரம்பர்க் புத்தக வியாபாரி ஜோஹென்ஸ் பிலிம் என்ற குற்றவாளி. ஆனால் இது தன் வீரத்தைக் கேலி செய்வதாக நினைத்குக் கொதித்தெழுந்த நெப்போலியன் மேற்படி குற்றவாளியைக் கூண்டில் ஏற்றி விசாரிக்கின்றான்.

நெப் : நீதான் இந்தத் துண்டு அறிக்கையை வழங்கினாயா?