பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

சாய்ந்த கோபுரம்



இவ்வளவு கொடுமைகளையிழைத்த ஆஸ்ட்ரியாவா தன் நாட்டின்பால் அனுதாபம் கொள்ளப் போகிறது? நடப்பது நடக்கட்டும் என முடிவு செய்தான் மாஜினி.

சிந்தனைச்செயலின் வித்தல்லவா? சிந்தனையைக் காட்டிலும் செயலே பெரிதென்பர் பல்லோர். அந்தத் தத்துவத்தை அவன் உள்ளம் வாங்க மறுத்தது. சிந்தனையில்லையானால் செயல் எப்படித் தோன்றும்? ஆகவே சந்தித்தான். மேலும் மேலும் சிந்தித்தான். மேகத்தில் மறைந்த முழுமதி திடீரென வெளித்தோன்றுவது போல் ஓர் எண்ணம் உதயமாயிற்று. அதுதான் மாஜினி கண்ட இளைஞர் இயக்கம். இளைஞரைக்கொண்டு எதையும் சாதித்துவிட முடியும் என்று அவன் உறுதியாக நம்பினான். ஏன்? இளைஞர்கள் வருங்காலச் சிற்பிகள், குடும்பக் கவலையறியாதவர்கள். வெள்ளையுள்ளத்தினர். அதே நேரத்தில் வன்மைமிக்க உள்ளம் படைத்தவர்கள். செயலில் முடிவென்ன என்பதைப்பற்றிக் கவலைப்படாமல் செயலின் தொடக்கமுதல் முடிவுவரை துள்ளிக் குதிக்கும் காளைகள். நட்பில் கொடி போன்றவர்கள். இளவயதின் காரணத்தால் கைதட்டியவுடன் ஒன்று திரளும் ஆற்றல் பெற்றோர்கள். பயமறியாக் காளைகள். அவர்கள் எண்ணத்துடிப்பை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று உறுதியாக நம்பினான் மாஜினி. எனவே இத்தாலிய இளைஞர் இயக்கத்தை நிறுவினான். அதன்