பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

சாய்ந்த கோபுரம்

49


கருத்துக்கள் காட்டுத் தீப்போல் பரவின. எங்கும் உணர்ச்சி வெள்ளம் பாய்ந்தது. இதாலியில் சுதந்திர சூரியன் தோன்றிவிட்டான். பிறகு ஒரு கொரில்லா படையத் திரட்டி அரசாங்கத்தைக் கைப்பற்ற முடிவு செய்து விட்டான்.

படைதிரட்டிப் பேசுகிறான்

‘பெரியோர்களே! இத்தாலியின் இருதயம் போன்ற இளைஞர்களே! உயிரைக் காணிக்கையாக அளிக்க முன்பந்த உத்தமர்களே! உங்களனைவர்க்கும் வணக்கம். இத்தாலிய இளைஞர் இயக்கம் வாய்ப்பேச்சால் போரிட, கொரில்லாப் படைகள் வாள் வீச்சால் போரிட, அமைத்து விட்டோம். இனி, எதிரிகள் நமக்குத் தூசி. சொந்த நாட்டின் பெருமையை வந்தவனுக்கு வாழ்வாக அளித்து இங்கிருந்தவன் இடர்ப்பட்டு வாழ எவன் கட்டளையிட்டிருங்தாலும் ஏற்கமாட்டோம். இரும்பை இரும்பால் அடித்து வளைப்பதுதான் நமது நோக்கம். அயல் காட்டார் நம் நாட்டில் நண்பர்களாக வாழலாம். ஆமாதிக்கிறோம். ஆதரவு தருகிறோம். ஆனால் நாட்டாண்மை கொண்டிருக்கும் யாரையும் இனி விட்டுவைப்பதாயில்லை. இதாலியின் கடைசி ஜீவநாடி முறிகிறது. இங்கே பிறந்தவன் எங்கோ இருந்தவனுக்கு இங்கிதமாக நடந்து கொள்ள வேண்டுமென்ற சங்கதியை ஒரு நாளும் நாம் சகிக்கப்போவதில்லை நாம் யாரிடமும் பிச்சையோ சன்மானமோ கேட்கவில்லை.