பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

சாய்ந்த கோபுரம்


நமது நாட்டை நம்மிடம் ஒப்படைக்கும்படி, வாள் முனையில் கேட்கிறோம். இதற்குப் பெயர் துரோகம் என்றாலும், சதி என்றாலும், புரட்சி என்றாலும் சகித்துக்கொள்ளத் தயாராயிருக்கின்றோம். பல நாட்கள் அடிமையாய் வாழ்வதைவிட ஒரு நாள் வீரனாக வாழ்ந்து உயிர்விட வேண்டும்.”

(கைதட்டல்)

என் மனம் என்னைச் செயல் புரியத் தூண்டுகிறது. இத்தாலிய நாடும், இளைஞர் இயக்கமும் அதையே உங்களைச் செய்ய அழைக்கிறது. பல நன்மைகள் கெட்ட காரியத்திலேயே ஆரம்பிக்கின்றதென்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. ஆக்க வேலைக்கு முன் அழிவு வேலை. இப்போது நாம் மேற்கொள்ளப்போவது அழிவு வேலை. இதற்கடுத்து படிகான் ஆக்கம். அது உங்கள் உழைப்பைக் கேட்கலாம். சதையைக் கேட்கலாம். உங்கள் பணத்தைக் கேட்கலாம். ஏன்? இறுதியாக உங்கள் உயிரையே கேட்கலாம். எவ்விதமான ஊதியமும் எதிர்பாராமல் இதில் ஈடுபடுங்கள். நீங்கள் சிங்கம் ஒவ்வோர் இரத்தத் துளியும், உங்கள் வருங்கால சந்ததிகள் செழித்தோங்கி வளர நீங்கள் போராடிப் பெறும் ஒவ்வோர் அங்குல நிலமும் நமது வருங்கால சந்ததிகள் சுதந்திரமாகத் திரிய. காலங்கடவா முன்னம் கடமையைச் செய்ய முன் வாருங்கள். ரோம், மிலான், நேபிள்ஸ் என்ற நமது தாயகங்களின் சிக-