பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

சாய்ந்த கோபுரம்


லும் ஆவேசக் கண்டனம்; “குறிப்பாக நம்மை போப்பாண்டவரே நம்மைக் கைகுலுக்கி உள்ளே அனுமதித்தார். இதைப் பொல்லாத போக்கிரிப் பயல் யார் நம்மைக் கண்டிக்க? நெடுநாள் தூங்கி விட்டோம். துஷ்டர்களைக் கண்டுபிடித்துத் தூக்கிலேற்றியிருந்தால் இந்தத் துடுக்குத்தனம் பரவியிருக்காது ! யாரோ ஒரு சிறுவன், படித்துப் பட்டம் பெற்றவன், வேலை கிடைக்காத காரணத்தால் உறுமுகிறான். நமது வல்லமை மிக்க அரசாங்க அணிவகுப்புக்கு முன் அவன் எம்மாத்திரம்? பயம் வேண்டாம்” இப்படிக் கூறுகிரன் ஒரு சந்தர்ப்பவாதி. “இல்லை, இல்லை, அவனா அடக்கியே தீர வேண்டும். இல்லையானால் மன்னர், மன்னர்பரம்பரை, மகுடம், சிங்காதனம் அவ்வளவும் செல்லரித்துப்போக வேண்டியதுதான்.” இப்படிக் கத்துகிறான் ஒரு பயங்காளி. மாளிகையில் ஒரே அமளி. ரோமிலிருந்து நேபிள்சுக்கும், நேபிள்ஸ்லிருந்து மிலானுக்குமாகத் தூதுவர்கள் மாறி, மாறி ஓடிக் கொண்டிருக்கின்றனர். சிறு உளி என்று விட்டு வைக்கக்கூடாது. அது மலையைக் கல்லிவிடும். சிறு நெருப்பென்று அயர்ந்திருக்கக்கூடாது. அது நாட்டைச் சாம்பலாக்கிவிடும். சிறு துளி என்று பாராமுகமாயிருக்கக்கூடாது. அது ஒரு பெருவெள்ளமாய் எங்கும் அழிவை உண்டாக்கிவிடும். சிறிய பாம்பு என்று விட்டுவைக்கக்கூடாது. அதன் விஷம் கொடியது. கண்டவுடன் கொல்லுங்கள். இதுவரை தோன்றாத எதிர்ப்பு இப்போது தோன்றியிருக்கின்றது.