பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாய்ந்த கோபுரம்

(மாஜினி)



காயப் பூந்தோட்டம், தாஜ்மகால், ரோட்ஸ் நகரத் தாமரைச் சிலை, இயற்கைப்பாலம். பைராமிட் கோபுரங்கள், பைசா நகரத்தின் சாய்ந்த கோபுரம் சீனத்தின் பெருஞ்சுவர் என்பன போன்ற உலக அதிசயங்கள் ஏழிலே ஒன்று சாய்ந்த கோபுரம். நில நடுக்கத்தால் அடித்தளம் நிலை குலைந்து கோபுரம் இப்படிச் சாய்ந்திருக்கின்றதோ என்று காண்போருக்கு அச்சந்தரும் அதன் அபாயக் காட்சி. இன்றோ நாளையோ என்றோ ஓர் நாள் இடிந்து விழும் அல்லது சாய்ந்து விடும், மேலும் நாளுக்கு நாள் சாய்ந்து கொண்டே வருகின்றது; ஆகவே யாரும் அதனருகில் போகவேண்டாம் என்று கூறவும் தோன்றும் அதன் தோற்றம். மற்ற கோபுரங்களெல்லாம் செங்குத்தாய் நிற்க, இது மாத்திரமேன் இப்படிச் சாய்ந்து நிற்கிறது என்ற சந்தேகம் சிலருக்கு. ஆகவே, இது தெய்வகடாட்சம், பெரியோர்களின் வினைப்பயன், நாட்டார்கள் நாசவேலை, நகரத்தின் சாபக்கேடு, எதிரிகளின் பீரங்கித் தாக்குதல், இடியின் கோபம், இயற்கையின் சினம் என்றெல்லாம் அதன் உண்மையை அறியாத பாமர மக்களும், அயல் நாட்டாரும் பேசிக் கொண்டிருந்தனர். ஆனால், நிலத்தின் இழுக்கும் சக்தி (ஆகர்ஷ்ண சக்தி) சாய்வாயிருப்பதால், அது உண்மை-