பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

57



டாயம் அணியவேண்டும் மற்றவர்கள் விரும்பினால் அணியலாம். ஆனால் கட்டாயமில்லை. அணியாதவர் களைக் கள்ள மார்க்கட்காரர்கள், குள்ளநரிகள் என்று கண்டிக்கும் தலைவர்களும் அங்கில்லே. ஆகவே அன்றுமுதல் தான் விரும்பியபடியே செய்து முடித்தான். அன்று தோன்றியது கருஞ்சட்டைப் படை.

மணி முடி மாற்றம்

இந்த நேரத்தில்தான், அதாவது 1821ல் கார்ப கொலைக்குற்றத்தில் சம்பந்தப்பட்ட சார்லஸ் ஆல்பர்ட் என்பவன், சார்லஸ் பெலிக என்பவனுடைய சார்டீனியன் சிங்காதனத்தை அலங்கரித்தான். இது மட்டற்ற மகிழ்ச்சியைத் தந்தது மாஜினிக்கு. ஏன் ? சார்லஸ் ஆல்பர்ட் வி டு தலைப் பிரியன். அவன் அலங்கரிக்கின்றான் சார் டீரியன் மணிமுடியை. வெற்றி நமதே என மனம் பூரித்தான். அந்தக் களிப்பின் பெருமிதத்தால் எழுதுகிறான் கடிகத்தை.

அன்பு மடல்

அன்புள்ள ஆல்பர்ட்! வணக்கம்.

கொலைக்குற்றத் தால் குருதியைச் சிந்தியிருக்க வேண்டிய நீர் அரியாசனத்தை அலங்கரிக்கின் மீர். எதிர்பாரா வெற்றி. எமாற்றமில்லாத மகிழ்ச்சி. மன்னர் பரம்பரையல்ல. மக்கள் பரம்பரை என்பதை கான் தங்களுக்கு நினைவூட்டுவதற்காகப் பெரு