பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

61


லாஸ்! என்று எழுதியிருந்தார். அதற்காக அந்த நாடோ, மன்னரோ, அன்று அங்கிருந்த உங்களைப்போன்ற நீதிபதிகளோ, கோபிக்கவில்லை.

நீதிபதி: ஒரு அரசாங்கத்தைக் கவிழ்க்க, மற்றொரு அரசாங்கத்தைத் துணைக்கழைப்பது மன்னிக்க முடியாத குற்றம்.

மாஜினி : மன்னிக்கமுடியாத குற்றம் மாத்திரமல்ல. மரண தண்டனை தரவேண்டிய குற்றம் என்பதையும் நான் அறிவேன். ஆனால், அதன் படி செய்து நீதியை நிலை நாட்ட வேண்டுமானால் இன்று உலகத்தில் இருக்கும் எந்த வல்லரசும் மிஞ்சாது என்பதை உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன்.

நீதி: அதனால் படைகளுள் ஏற்பட்ட பலவித கொலைகளுக்கு என்ன பதில் சொல்கிறாய் ?

மாஜி: போர்முனையில் ஒரு அரசனுடைய பேராசைக்காகப் பல போர்வீரர்கள் உயிர் விடுகிரறார்களே, அதற்கு யார் பொறுப்பாளி?

நீதி : அதைக்கேட்க உனக்கு உரிமையில்லை.

மாஜி : எனக்குப் பேச்சுரிமையில்லையா?

நீதி: உண்டு. ஆனால் அரசாங்கத்தைப்பற்றி மாத்திரம் பேசக்கூடாது.