பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

சாய்ந்த கோபும்


மாஜி : என் பேச்சுரிமையில் அதற்கு விதி விலக்களிக்கப்பட்டிருக்கிறதா? இதற்குப்பெயர் தான் பேச்சுரிமையா? இன்று அரசாங்கத்தைப்பற்றி பேசக்கூடாது. நாளை, அரசரைப்பற்றி பேசக் கூடாது. மற்றொரு நாள் சட்டங்களைப் பற்றிப் பேசக்கூடாது. இன்னொருநாள் அந்தச் சட்டங்களைப் பரிபாலிக்கிற சட்டசபைகளைப் பற்றிப் பேசக் கூடாது. பிறகு ஒன்றுமே பேசக்கூடாது. ஒரு சுதந்திர நாட்டின் சர்க்கார் அளித்திருக்கும் பேச்சுரிமை இதுதானா? சரி.


உள்ளே சென்று குசுகுசுவென்று யாரோ நான்கைந்து பேர் பேசி முடித்துக்கொண்டு வெளியே வந்தார்கள்.


அதில் ஒருவர்: மாஜினி ! உனக்கு மரணதண்டனை. ஏதாவது கடைசியாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறாயா ?


மாஜினி : கலகலவெனச்சிரித்தான். “இவ்வளவு நேரம் சொல்லியதே உங்கள் புத்திக்கு எட்டவில்லையே? இனிப்புதியதாக என்ன சொல்லி நீங்கள் தெரிந்துகொள்ளப் போகிறீர்கள்? (Justice is not in the hands of fools and heroism. is not in the hands of Cowards,) நீதி மடையர்கள் கையில் இல்லை. வீரம் கோழைகள்பால் இல்லை. இதுதான் என் கடைசி வார்த்தை முடித்து விடுங்கள் உங்கள் விசாரணை நாடகத்தை” என்றான்.