பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

சாய்ந்த கோபுரம்


கிறது. மாஜினியைக்காணோம். பதைபதைத்துப் போனான், சிறையதிகாரி. எப்படித் தப்பியிருப்பான்? யார்செய்த உதவி? காலில் விலங்கு கைகளில் விலங்கு, விலங்குகள் மட்டிலும் அரத்தால் ராவப்பட்டிருக்கின்றன. ஆனால், ஆளக்காணோம். என்ன பதில் சொல்வது சர்க்காருக்கு? எப்படி உயிர்தப்பமுடியும்? மாஜினிக்கு வந்த மரணதண்டனயை நம்மேல் சுமத்திவிட்டான் நாசகாலன். எப்படித்தப்புவது? யாரிடம் சரணாகதியடைவது ? இதை நினைத்தே பாதி பைத்தியமாய்விட்டான் சிறையதிகாரி. எனினும் மாஜினி தப்பியவன் தப்பியவன்தான். ஏனெனில், அவன் எடுத்த காரியங்கள் இன்னும் முடிவடையவில்லை.


தலைமறைவாகத் திரிந்துகொண்டே காரியங்களைக் கவனிக்கவேண்டிவந்ததால், அந்த ஆண்டில் இவன் பிறந்த நாடான ஜினோவாவில் ஏற்பட்ட புரட்சி முழுத்தோல்வியடைந்தது. போதிய அனுபவமற்றவர்களும், புதியதாக இயக்கத்தில் சேர்ந்த இளையோர்களும், திறமையான வழிகாட்டிகளும் இல்லாததால் அந்தப்புரட்சி வெற்றி பெறாமல் போய்விட்டது. ஒரு பெரிய போராட்டத்தைத் தொடங்குபவர்களுக்குச் சிறந்த ஆராய்ச்சியில் ஈடுபடுகிறவர்களுக்கு, சிறந்த சிந்தனையாளர்க்ளுக்கு அடிக்கடி இதைப்போன்ற தோல்விகள் ஏற்படுவது மிக சாதாரணம் என்று அவனுக்குக் தெரியுமாகையால் அவன் அதில் அவ்வளவாக எமாற்ற மடையவில்லை.