பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

67



கருத்தைத் திருத்திக்கொள்ள முயன்றதோடல்லாமல், 'அகில உலக அரசியல் மேதை', என்று பெயர் வாங்கிய ஆங்கில நாடு இன்னும் வீரன் மாஜினியின் வன்மைமிக்க எழுத்துக்களைப் புத்தக வடிவில். வெளியிட்ட வண்ணம் உள்ளது.

அறிவு ஈட்டிகள்

1839.ல் 'மால்டா மேரியர்'; 'கடமையில் மனிதன்,' என்ற இரண்டு நூல்களை வெளியிட்டான் மாஜினி. இவைவெளியான மேற்சொன்ன ஆண்டின் இறுதியில் தான். மிலான், மஸாய்னா என்ற இரண்டு இடங்களில் புரட்சியை நடத்திக்கொண்டிருந்த தலைவர்கள், மாஜினியை அழைத்துப்புரட்சியில் பங்குகொள்ளச் செய்தனர். புரட்சிக்குத் தலைவன் கரிபால்டி, சொல்லவும் வேண்டுமா? அந்தக் கரிபால்டியின் தலைமையில் மாஜினி ஆயுதங்களைப் பெற்று வெற்றிகரமானதோர் புரட்சியை நடத்திச் சார்லஸ் என்பவனைச் சிங்காதனத்திலிருந்து மண்ணில் உருட்டி, மிலானை மீண்டும் சுதந்திர நாடாக்கினான். தனக்கு, முன்பு மரண தண்டனையளித்த மன்னன் சார்லஸ் ஆல்பர்ட் என்பவனை மண் கௌவச் செய்து பழிக்குப் பழி வாங்கினான். எனினும் அயல் அரசுகள் இவனை விடவில்லை.

மரணதண்டனை நெ. 2

இவன் செய்த இந்தக் கோரக்கொடுமைக்காக இவனுக்கு இரண்டாவது முறையாகக் கிடைத்த பரிசு மரண தண்டனை இரண்டாவது முறையும்