பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

சாய்ந்த கோபுரம்



மரணதண்டனை. குலுங்கக் குலுங்கச் சிரிக்கின்றான். "மரண தண்டனை என்னைப் பொறுத்தவரை மிகமலிவான பொருள். வா என்றால் வரும். போ என்றால் போகும். அதைவிடக் கொடிய தண்டனை ஏதாவது உண்டா என்றால் இல்லை. அதற்கப்பால் எந்தத் தண்டனையும் எந்த நாட்டுச் சட்டப் புத்தகத்திலேயும் இல்லை. ஆகையால் சட்டத்தின் இறுதிக்கோடு மரண தண்டனைதான். அவன் பூதஉடலைப் பொசுக்கிப் புகழுடலுக்குச் சுதந்திரம் அளித்துவிடுவதற்குப் பெயர் மரண தண்டனை அவன் உயிரோடிருக்கும்போது புகமுடியாத இடமெல்லாம் அவன் புகழ்பாவ, தன்னையறியாமல் இடந்தந்து விடுவதற்குப் பெயர் மரண தண்டனை. ஏனெனில் நிரபராதியான் அவனிடத்திலிருந்து விரைவில் பறித்துவிடக்கூடிய பொருள் உயிர் ஒன்றுதான். அவன் விரும்பினால் அதையாருக்கு வேண்டுமானாலும் பராதீனப்படுத்திவிட முடியும்; மற்றோர் குற்றவாளிக்கு ஈடுசெய்துவிட முடியும். அறிவாளியின் மூளையை ஆயிரக்கணக்கான பொற்காசுகளுக்கு வாங்கிவிடுகிறது. பல அறிவுள்ள சர்க்கார். ஆனால் இந்தச் சர்க்கார். சுதந்திரத்திற்குப் பரிசாக என் உயிரை வெகுமதி கேட்கிறது. இதைவிடப் பெருமை எனக்கென்ன வேண்டும்? கோடானு கோடி மக்கள் வாழ, மாஜினி உயிரிழந்தான் என்றால், அதில் துக்கப்பட என்ன இருக்கிறது. இந்த அற்ப உயிரை நான் மனமார அவர்களுக்குத் தாரளமாக அளித்துவிட முடியும். ஆனால்,