பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

69


யாருக்கும் சொந்தமாக்க முடியாத பொருள், எந்த அரசாங்கமும் எவ்வகையில் முயன்றாலும், எடுத்துக் கொள்ள முடியாத பொருள் சுதந்திரம் ஒன்று தான். தீயால் பொசுக்க முடியாத பொருள், அலைகளால் மோதி அடித்துக் கொண்டுபோக முடியாத பொருள், அலைகடல் பொங்கித் தரணியைத் தன்னுள் அடக்கிக் கொண்டாலும், அழிக்க முடியாத பொருள் சுதந்திரம் ஒன்றுதான். தாய் நாட்டின் மண்ணை முத்தமிட்டான் சுதந்திரத் தந்தை ரூசோ. அதேபோல் நானும் என் தாய் நாட்டை முத்தமிடுகிறேன். அதற்காக நான் எதையும் செய்யக் தயாராயிருக்கிறேன். அது விரும்பும் எதையும் நான் கொடுத்துக் தியாகத் தழும்புகளை என் உடல் முழுதும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அங்கத் தியாகத்திற்காக நான் எதையும் கைக்கூலியாக, வீரமானியமாகப்பெற்றுத் தியாகி என்று வெட்கமில்லாமல் திரியமாட்டேன். கொடுப்பவன் தான் தியாகியே தவிர, வாங்குகிறவனல்ல தியாகி என்பதை என் வாழ்விலிருந்தாகிலும் வையகம் உணர்ந்துகொள்ளட்டும். ஆனால், ஏழ்மையின் காரணமாக யாராவது கைம்மாறு விரும்பி, அதைப் பெற்றுக்கொள்வார்களானல், கொண்டர்கள் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளட்டும். ஆனால் தியாகி என்று சொல்லி, அந்தப் புனிதமான வார்கயின் கண்ணியத்தைச கெடுக்காதிருகக வேண்டி க் கொள்கிறேன்.