பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

சாய்ந்த கோபுரம்



ஆகவே சுதந்திரத்தைக் காப்பாற்றக் தான் துச்சமென மதிக்கும் உயிரைத் தியாகம் செய்கின்றான். மேலும் மனிதன் ஒரு தடவை தான் பிறக்கின்றான் . அஃதே போல் ஒரு தடவைகான் இறக்கின்றான். அந்த இறப்பைச் சற்று முன்கூட்டிக் கொடுத்து விடுவதற்குப் பெயர் மரண தண்டனை.

மரணம். மனிதனோடு பிறந்தது. மாற்ற முடியாத இயற்கையின் நியதி. மரணம் மனிதனுடைய நிழல். ஆபத்தால் மரணம், உடல் நோயால் மரணம், உட்கொள்ளுவது நஞ்சானால் மரணம். அனல் கக்கும் எரிமலையால் மரணம். அரசன் பேராசையால் மரணம். நாட்டின் எல்லையைத் தாண்டுவதற்காக ஏற்படும் போராட்டங்களால் மரணம். கடல் கொங்தளிப் பால் மரணம். கார்மேகங்களால் எழும் இடியாலும் மின்னலாலும் மரணம். தவறி விழுங்தால் மரணம். தடாகத்தால் மரணம், விஷ ஜந்துவால், கொடிய விலங்கால், கோர சம்பவத்தால், வைசூரியால், வாத நோயால், மரணம். மனிதனுக்கு முடிவு உண்டென்பதை, அதோ அந்த மரத்திலிருந்து உதிரும் இலைகள் சொல்லுகின்றன. ஈமக் காட்டில் எழும் புகை சொல்லுகின்றது. மனிதன் தன் வினையால் தானே அழிவைத் தேடிக்கொள்கிறான் என்பதை, அவன் கைத்திறன் அனைத்தையும் ஈடாக்கி அவன் செய்த வாள் முனையே சொல்கிறது. ஆட்சி பீடம், பலி பீடம் இரண்டும் அடையாளங் கண்டுபிடிக்க முடியாத அலைகளைப்