பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

71


போன்றவை என்பதை அவற்றின் மீதிருந்து சிந்தும் ரத்தக் கறைகள் காட்டுகின்றன.


ஆகவே, தானே அகால மரணத்தைத் தேடிக் கொண்டால் மன்னிக்க முடியாக குற்றம். ஒரு நீதியின் போக்கு என்னே! என்னே! சட்டங்களின் செல்வாக்கு!” என்று கூறிச் சிரிக்கின்றான்.


இப்படித் தரப்பட்ட மரணதண்டனையும் வீரன் மாஜினியின்பால் கேலிக்கூத்தாக, வீண் விளையாட்டாக, விருதாவேலையாகப், போய் விட்டது, ஏன்? இரண்டாவது முறையும் மாஜினிக்கு மரண தண்டன எனக் கேட்டதும் மக்கள் திரண்டனர். கடையடைப்பு, கண்டனக்கூட்டங்கள். கருப்புக்கொடி ஊர்வலம். அலுவலகங்களில் எல்லாம் ஆர்ப்பாட்டம்.

கண்டனக் கூட்டம்

எங்கும் கருப்புக்கொடி பறக்க விடப்பட்டிருக்கின்றன. கூட்டத்துக்குக் காரல் மார்க்ஸ் தலைமை வகிக்கிறார்.

தலைமையுரை

தோழர்களே !

இத்தாலி அழிவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றது. தெளிந்த இலக்கியக் கர்த்தாவும்: சிறந்த சுதந்திர வீரனுமான மாஜினிக்கு மரண