பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

75


வனை, புல்லர்கள்போல் வாழ்ந்த எங்களைப் புலி நிகராக்கியவனே, எங்கள் மாவீரன் மாஜினியை, விடுதலை செய். வீணில் மடியாதே. வீராப்புப் பேசாதே ஷ! உனக்கு மணிமுடி யளித்த மக்கள் கடல் கொந்தளிக்கிறது. இப்படி ஒருவரா, இருவரா? எல்லா நாடுகளிலும் கேட்டனர். பிரஞ்சுப் புரட்சியை எழுதிய தாமஸ் கார்லேல் கண்ணீர் சிந்துகிறார் பாரிசில். கேவோரும் கரிபால்டியும் கண்டனக் கூட்டங்களுக்குத் தலைமை வகிக்கின்றார்கள். கூட்டங்களைக் குதிரைப் பட்டாளங்கள் கலைக்கின்றன. மாஜினி முன்போல் சிறையிலிருந்து தப்பியோடிவிடப் போகிறான் என்று துணையாக இரண்டு குற்றஞ்செய்யாத கைதிகள்: சிறைச்சுவரைச் சுற்றிப் பலமான பாதுகாப்பு. இதாலிய இளைஞர் இயக்கம், ஐரோப்பிய இளைஞர் இயக்கம், ஸ்விட்ஜர்லாந்து இளைஞர் இயக்கம், மறுமலர்ச்சிக் கழகங்கள், மாணவர் முன்னேற்ற சங்கங்கள், இலக்கிய ஆராய்ச்சி நிலையங்கள், பேச்சுரிமை எழுத்துரிமைச் சங்கங்கள், விடுதலைப் போராட்டிச் சங்கங்கள், சீர்திருத்தக் கழகங்கள், கருஞ்சட்டைப் படை, கொரில்லாப்படை யணிவகுப்பு, சிறந்த அரசியல்வாதிகள் ஆகிய அவ்வளவும் கண்டிக்கின்றன. மாஜினியின் மரணதண்டனையை கண்ணீர் சிந்துகின்றனர் சுற்றத்தாரும் தோழர்களும். இவ்வளவும் வெளியே.

மாளிகையின் உள்ளே

மன்னர் இங்குமங்கும் ஒடுகின்றார். மதிமயங்கி நிற்கிறார். பல பெரிய மனிதர்களிடம் யோசிக்-