பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

சாய்ந்த கோபுரம்



கிறார், மிலானிலிருந்து நேபிள்ஸுக்கும், நேபிள்ஸிலிருந்து ரோமுக்கும் போப்பாண்டவர், கசடனை விடாதே, காட்டுக் கூச்சலைக்கண்டு கலங்காதே, கயவனுக்கு உயிர்ப்பிச்சை யளிக்காதே என்றெல்லாம் கண்டிப்பான உத்திரவுகள் அனுப்பிக் கொண்டிருக்கின்றார். ஆனால், இங்கே நிலைமை, வெளியே தலைநீட்ட முடியாது. மன்னன் மாத்திரமல்ல, மாளிகையின் பணியாட்களுங்கூட தண்டனையை நிறைவேற்றும் நேரம் நெருங்குகிறது. மக்கள் ஆவேசம் அதைவிட விரைந்தோடுகிறது. வேந்தன் கட்டளை - தூக்குமரம், மாஜினியின் விடுதலை, மக்களின் ஏகமனதான குரல் ஆகிய இவைகளில் எது வெற்றிபெறுமோ யார் கண்டார்கள் என்ற சந்தேகம் அவனைக் கொல்லும் வரையிலும் இப்படித்தான் கத்துவார்கள், கொன்று பிணத்தைத் தூக்கி வெளியே எறிந்தால் அந்தத் துக்கத்திலேயே பிணத்தின் பின்னால் போய்விடுவார்கள் என்று இப்படித் தூபம் போடுகிறான் இதாலியசாணக்கியன். அரசனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அவன் எப்போதும் கண்டதில்லை இவ்வளவு பெரிய எதிர்ப்பை. என்ன ஆகுமோ தூக்கிலிட்டால் என அஞ்சுகின்றான். ஒரு மனிதன் உயிருக்காக உலகமே கண்டிக்கின்றது. கால்மார்க்ஸ் கார்லைல், கரிபால்டி கேயோர், அப்பப்பா! என்ன மகத்துவம் இவனுக்கு? என்றெல்லாம் மன்னன் சிந்திக்கின்றான். எனினும் தூக்கிலிட வேண்டும் என்ற துணிவு பனிபோல் கரைகிறது. தூக்கிலிடும் துடுக்கர்கள் இருக்கத்தான்