பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

சாய்ந்த கோபுரம்


யால் பல்லாயிரக்கணக்காகப் பொதுத்திடலில் கூடினார்களோ, எந்த மக்கள் தன் ஆவேசக் குரலை இத்தாலி முழுதும் எடுத்துச்சென்றார்களோ, எந்த மக்கள், தன் சொல்லம்பால், ஏகாதிபத்தியப் பாசிச மமதை மிகுந்த இராணுவத் தமுக்கில் குத்தி அதன் தோல்வாயைக் கிழித்தார்களோ, எந்த மக்கள் தன் பேனாவின் முனைகொண்டு அதிகார ஆணவத்தை ஆட்டிப்படைத்தார்களோ, அந்த மக்களே விரும்பி வருந்தி உழைத்துத்தந்தப் பதவியை ஏற்க மறுத்தான் சுதந்திர வீரன் மாஜினி, தான் மூடப்பழக்க வழக்கங்களுக்கும் சடங்கு சம்பிரதாயங்களுங்கும் அடிமைப்பட முடியாது என்ற காரணங்காட்டி.

ஒரே குழப்பம்

இப்படித் திரும்பித் திரும்பி வந்த சூழ்நிலைகளைப் பார்த்த பிறகு, அரசியல் ஒரு சூதாட்டமென எண்ணி, அதன் சதுரங்கத்தை எப்படி அமைப்பது என்ற திட்டம் வகுத்துத் தன் தாய் நாட்டைத் தரைமட்டமாக்கிக் கொண்டிருந்த அயல் அரசை ஆங்கிலேயர் உதவிகொண்டு எப்படியாகிலும் நீக்க எண்ணினான். அவன் இறுதி வரையிலும் புது எண்ணங்களின் புதையலாகவே இருந்தான். இளைஞர்கள், “போதும், போதும்” என்று சொல்லும் அளவுக்குப் புதுக்கருத்துக்களைத் தூவினான். அவனை ஒரு சாதாரண வீரனாக்கி உள்ளம் குளிர்ந்து விடாமல், புரட்சி வீரனாக்கி, இலக்கியக் கர்த்தாவாக்கி, உலக வரலாற்