பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

சாய்ந்த கோபுரம்



நகரம் லண்டன். இடையே மூன்று மாபெரிய பயங்கரக் கடல்கள் உலகத்திலேயே மிகப் பெரிய கண்காட்சியை நடத்தும் நகரம் சிட்னி, அந்த மாபெரிய கண்காட்சிசாலையில் 1930-ல் ஒரு அதிசயம். இந்த அதிசயம் அந்த சிட்னியில் எப்போதுமே நடந்ததில்லை, பல மண்டலத்தாரை அங்கே காணலாம். பாரிஸ் மங்கையை, பிரான்ஸ்சின் தலைவர்களை, எகிப்து நாட்டானை, இதாலியக் கவிஞனை, அமெரிக்க முதலாளியை, ஆங்கிலேய நாட்டு அரசியல் மேதையை, பொதுவுடமை நாட்டுப் புரட்சிக்காரனை, தர்க்க வாதியை, தத்துவ ஞானிகளை, மங்கோலியனை, சீன நாட்டானை, நடன மாதர்களை: சூரர்கள், சூதாடிகள், வேடிக்கைப் பார்க்க வருவோர், அதை விழாவெனக் கொண்டாடுவோர், பல நாட்கள் காண முடியாமல் கவலைப்பட்டு கருகிய மனதோடும் சுருங்கிய முகத்தோடும் காலத்தை நோக்கி நின்ற காதலர்கள், கண்காட்சி எப்போது தொடங்கும் என்று தம் துடித்த உள்ளத்தைத் தட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கும் மணமக்கள், அந்த கண்காட்சியில் சம்பாதிப்பதை ஆண்டெல்லாம் வைத்துக் கொண்டு வாழ்ந்த வணிகர்கள் எல்லாரையும் அங்கே காணலாம்.

சந்தை

கண்காட்சி என்றால் கோழியையும், குருவியையும் கூண்டில் அடைத்துக் காட்டுவதா அது? கோகில கானங்கள் குயிலோசை எழுப்புவதா