பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

சாய்ந்த கோபுரம்


 இருப்புக்கொள்ளவில்லை, பல தலைவர்களிடம் தொடர்பு கொள்ளவேண்டும் என்று நினைத்த மாஜினி, 1870-ல் இங்கிலாந்து சென்று அங்கிருந்து சிஸிலிக்குப் புறப்பட்டான். கப்பல் நடுக்கடலிலே போய்க்கொண்டிருக் கின்றது. ஆம், சிஸிலியில் இறங்கிப் பல தலைவர்களைச் சந்தித்துப்பேச வெகு ஆசையோடு போய்க்கொண்டிருக்கின்றான். ஆனால், நடுக்கடலிலேயே கைதுசெய்யப்பட்டான். காரணம் காட்டப்படவில்லை. காருண்ய மிகுந்த சர்க்கார்கள் என்று பெருமையடித்துக்கொள்ளுகிற எந்த சர்க்கார்தான், மணிதன் உரிமையைப் பறிக்கத் தகுந்தகாரணம் சொல்லுகிறது? இந்தக் காலத்தில், இவ்வளவு நாகரிக சர்க்காரிலேயே இந்த முற்போக்குப் பாதயை காணமுடியவில்லையே. அன்றந்த அயல்நாட்டாட்சியில் அந்த உரிமையின் அழகு எப்படி வடிந்து கொட்டிருக்கும் ? ஆகையால், காரணங்காட்டாமலே கைது செய்யப்பட்டு, கெய்டாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கே இரண்டு திங்கள் சிறையிலடைக்கப்பட்டான்.

அவனைக் கைது செய்வதற்குக் காரணம் என்ன வென்றால், இவனைச் சிறைச்சாலையில் அடைத்து வைப்பதின்மூலம், அரசாங்கத்துக்கு எதிராக நடந்துகொண்டிருந்த புரட்சி நடவடிக்கையை ஸ்தம்பிக்கச் செய்யலாம் . . . என்பதுதான். அவன் சிறைச்சாலையிலிருந்து வெளியே வருவதற்குள் ளாக ஆதரிப்பவர்களும், எதிர்ப்பவர்களும் சமத்