பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

87



தொகையினராகிவிட்டனர். அதல்ை. யார் மெஜாரிட்டிக் கட்சியினர், யார் மைனாட்டிக் கட்சியினர் என்று அறுதியிட்டுச் சொல்லமுடியாத அளவுக்கு இரண்டு கட்சிகளும், அதாவது சர்க்காரை ஆகரிக் கும் கட்சி, எதிர்க்கும் கட்சி ஆகியவைகள் இரண்டு திங்களில் ஓங்கி வளர்ந்துவிட்டன மக்கள் மனப் பெருக்கத்தை மாளிகையின் பணப்பெருக்கம் தடுத்துவிட்டது. மாஜினியின் கேடியான பார் வையில் கிமகிறுவென வளர்ந்த இயக்கம் விடுதலே யாய் வெளியே வருவதற்குள் சர்க்கார் கட்சி வளர்ந்துவிட்டது. அந்தச் சூழ் நிலையையுண்டாக்கி விட்டார்கள் சூககர்களும், முடிகாங்கிகளின் தாள் தாங்கிகளும். வெளியே வந்த மாஜினி இந்த கிலேயைக் கண்டு கண் கலங்கினன். எனினும் அவன் முயற்சியில் தளரவில்லை. படமெடுத்தாடிய பாமரமக்களைத் தன் மகுடியால் ஒன்று சேர்த்கான மீணடும் ஓர் மாபெரிய பொதுக்கூட்டத்தைக் கூட்டினன். ' என் குரல் உங்களைச் செயல்புரியக் கூவுகிறது. உங்கள் கைதட்டலின் எதிரொலி கோட்டைச் சுவர்களில் கேட்கிறது. அந்த ஓசை உள்ளே வசிக்கும் உல்லாச புரியினர் காதில் ஒலிக்கிறதோ இல்லையோ, அவைப் ப ற் றி நானோ அல்லது நீங்களோ கவலைப்படக்கூடாது. ந ம் ந ம து கியாயமான பாகையை விட்டு விலகப் போவதில்லை. இதுவரை என்னப் பின்பற்றினிர்சள். இனியும் அதைச்செய்யத் தயங்கமாட்டீர்கள் என்று திடமாக