பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

சாய்ந்த கோபுரம்



நம்புகிறேன். என் மரணதண்டனைக்கு மரண ஒலை படித்த உங்கள் மட்டற்ற உழைப்புக்கு சான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கின்றேன். எனினும் நாம் எடுத்துக்கொண்டிருக்கும் வேலை, ஒருவர்மேல் இருக்கும் ஆசையை, ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளுகிற வெறும் அன்பு மடலாக, சம்பிரதாயச் சடங்காக இருககக் கூடாதென்பதே என் வேண்டுகோள்.' " தீட்டிய வாளுக்கு இரையாகாதிருக்க நம்மில் பலர், மன்னர்கள் தீட்டிய பணத்துக்கு அடிமையாய் விட்டார்கள் என்பதை எண்ணும்போது என் மனம், வேதனையடைகிறது. நான் என் ஒருவனுக்காகவே பாடுபட்டேன் என்று அவர்கள் கினைத்து அவ்வண்ணம் கொள்கையைப் பணத்துக்காக விற்றார்கள் என்ற செய்தியைக் கேட்டபோது, அவர்கள் அறியாமைக்காக இரங்குவது தவிர, ஆத்திரப்பட்டுப் பயனில்லே. நேற்றுவரை நம்மோடு இருந்து தோளோடு தோள் உரசிநின்று பல கஷ்டங்களை அனுபவித்து ஓரளவுக்கு வெற்றி பெறும்போது ஒதுங்கி நிற்பவர்களைப் பற்றியோ பக் கி யால் மயங்கிக், கொள்கையை விலைகூறும் குள்ள மனம் படைத்தவர்களைப் பற்றியோ நாம் கவலைப்படக் கூடாது. இலட்சியவாதிகளை இகழ்ச்சியும் அணுகுவதில்லை. புகழ்ச்சிக்காக அவர்கள் பல் இளிப்பது மில்லை. ஏற்றத்தாழ்வுகளே எவன் சமமாகக் கருதுகின்றனே, அவனே பொதுநலக் கொண்டகைத் தகுதியுடையவன். ஏனெனில், அவன் திரும்பிய