பக்கம்:சாய்ந்த கோபுரம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

சாய்ந்த கோபுரம்



யிருந்தான். ஆனால் இவன் செய்க இங்க முயற்சி காலம் கடந்துவிட்டது. அவன் சிறையிலிருந்து வெளியே வருவதற்கு முன்பே, மன்னன் வீசிய மாயவலையில் மக்கள் அகப்பட்டுக்கொணடனர். அகப்பட்டவர்கள் போக எஞ்சியவர்களத் தடுக்க முயன்றான். முடியவில்லை. மக்கள் யார் ? என்ற விசாரணையிலிடுபட்டான்.

மக்கள் யார் ?

பல்லாண்டுகள் மக்கள் மடமைக்கடலில் மிதந்தவர்கள். அறியாமையால் அற்பப்புகழ்ச்சிககு அடிமைப்பட்டவர்கள். தங்கக்கவசத்திற்குள் சரித்திர எண்ணம் மறைந்துகொண்டிருப்பதை அறியாதவர்கள். பணத்கோட்டத்தில் தாம் பிணமாக நேர்ந்தாலும் மனத்தைத் தம்வசப்படுத்தத் தகுதி யற்றவர்கள். தரித்திரத்தோணிக்குக் கங்க நங்கம் போட்டிருந்தாலும் கங்கடாம் தேவையா ? தோணி தேவையா? அதன்மேல் தம் பிரயாணம் அவசியமா? என்பதெல்லாம் தெரியாமல், தங்க நங்கூரம் போட்ட தோணியில் கரித்திரக்கடலில் மூழ்குவதாலுைம், விடிைக்கு எத்தனை மூச்சு என் பதை விரல்விட்டு எண்ணக் கூடியவர்கள். காலையில் வறுமை, மாலையில் பெருமை என்ற குறுகிய காலஅளவோடு தன்கருத்துக்கு வேலியிடுபவர்கள். களி மண்ணைப் போன்றவர்கள். இன்று ஒரு உருவம் செய்யலாம் நாளையே அதை மாற்றி வேறோர் உருவம் செய்துகொள்ளலாம் என்ற மனக்கட்டுப்பாடில்லாதவர்கள். காலத்தாலும் கருத்தாலும் மாறமுடியாதவர்கள். ஏழைகள். எதையும் நம்பும் இயற்கைச் சுபாவமுடையவர்கள். சிங்கிக்கத் தெரியாதவர்கள். ஒருவன் கொள்கையைப் பின்