பக்கம்:சாவின் முத்தம்.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சாவின் முத்தம்

7

காட்டுகிறாள் பாண்டிநாட் டரசி! ஆலங்
கனிநிறத்து இதழ் ஊன்ற வரும்என்மீது
வாட்டத்துப் பார்வையினை அனுப்புகின்றாள்! வாரிஉண்ணப்போகையிலலே ‘தொடாதே’ என்று
ஆட்டிவைத்து மறைகின்றாள் மீண்டும் மீண்டும்
அன்புவரும்! இருட்டும்!பின் அமுதம் தந்து
ஊட்டத்தைக் கொடுக்கின்றாள்! அழகு என்னும்
ஒளிமடந்தை என் உலகம் அவள்தான் கண்டீர்!


தேம்பிய குறை !


தின்னும்இதழ் பூரிக்க, நிலாமுற் றத்தில்
சீக்கிரமாய்ப் போயமர்ந்தேன் ‘குமுதம்’ வந்து,
“என்னஅத்தான் ஊர்ச்சேதி? அம்மர், அப்பா,
எல்லோரும் சுகந்தானா? போன நாளாய்
சின்னஒரு தூக்கம் உண்டா! இருட்டோரத்தில்
தூக்கிஎறிந் தேவிட்டுப் போய்விட் டீர்கள்!
கன்னத்தில் விளக்கேது! சிரிப்ப ணைத்துக்
காவலுக்குத் தென்றல்வந்து வேலை செய்தாள்!

அரும்பெடுத்தேன் தொடுப்பதற்கு! அதற்குள்
அத்தை
ஆருக்கு என்றதும்நான் கூம்பி விட்டேன்
பெரும்படையை முத்தமிடும் வாளை விட்டுப்
புருஷரெலாம் போயேந்தும் பெண்சி ரிப்பில்,