பக்கம்:சாவின் முத்தம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

சாவின் முத்தம்

அண்ணல் ஒருவன் அருகில் நீண்டது!
சாகசம் பிடிக்கும் இதழால், "சோலை
போகிறேன் பூக்கள் பறிக்க" என்றாள்!
அமைத்தனர் விடையை! எல்லாப் பெண்களும்
சுமைக்குளிர் தூக்கிச் சென்றனர் காடு!

பூக்கள் குவித்தனர் பெண்கள்! குறிஞ்சியும்
தேங்கிய மடைநடை வாங்குதல் போல
விரைந்து, விரைந்து, எழுச்சியில் துள்ளி,
விசாலத் தாலே, விழுங்க-அமுதின்
ஊற்றுக் கண்ணில் மழைக்கடல் தோண்டி
சர்க்கரைத் தாக்கலில் தடுக்கி விழுந்து!
தக்க விதத்தில் - சுவைத்து - அவனுடன்
கழிக்காத கரும்பு அறுவடை குவித்தாள்!

***



'என்னடி சிலதி இன்னும் குறிஞ்சியைக்
காணுேமே ஏனடி? காடுதான் தின்றதா?
முல்லைப் பூவில் மூழ்கிவிட் டாளா?
என்ற மொழிகளே இருவரும் கேட்டனர்.
"வருகிறேன்” என்றாள்: வாடாத மலரில்
ஒருதரம் அழுந்தி, "ஓடிப்போ மயிலே"
என்றுதொடுக்கும், இவனிதழ்ச் சிரிப்பு,
அன்று பூத்த அழகிய தாரகை!
குளத்துக் கரைக்குக் கூவிப் பறந்தனள்
கோதை வண்ணக் குறிஞ்சி!
ஒவ்வோர் பூவின் கதையைப் பேசி
செவ்வாய் வகுத்த சிரிப்புடன், பெண்கள்
அழகைப்பிடித்து எழுந்தனர் குறிஞ்சியும்
பழகிய விருந்தை நினைவில் தொட்டு
“சுடாத இரவு” எனகடந் தாளே!