பக்கம்:சாவின் முத்தம்.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சாவின் முத்தம்

35

ஊதை திரும்பும் வீட்டில் மூச்சை
வேது பிடிக்க விரைவான் பையன்.
கூடல்வாய் வள்ர்க்கும் வாடாச் சொட்டுகள்
ஓலையில் தடுக்கி மேலே உதிர்ந்ததால்
தூக்கம் எழும்பித் துணைவிழி இரண்டையும்
தாக்கிற்று இல்லமே சிலிர்த்தது

தேம்பிற்று இளமை சிறுமி தரைஉத்தி
வறுத்த மொச்சையின் வாயைப் போலக்
குளிரிதழ் நீவிக் கொட்டாவி அனுப்பினாள்.

மீண்டும் அமைத்த தூக்கம் பார்வைக்
கூண்டில் நுழைந்து குளித்தது!
கொச்சிப் பூ உதிர் கபில வண்ணத்துச்
சுருளும் இருட்டில், முடங்கிக் கிடந்தன
பச்சைக் குழந்தைகள்! தீய கனவின்
வரிகளை உதடு வரைந்திட அன்னை
பொருந்தாது கொஞ்சம் புரண்டாள், மூலையில்
கிடந்த விளக்குத் தண்டில் முகம்விழ,
உலராத காயம் நனைந்தது அழகில்!
இந்தத் தீங்கை இழைத்தது எதுவென
கைவிளக் கேற்றிக் காணுவ தற்குத்
தேடினாள் தீபம் திரும்பினள். வாயின்
நுனியில் முளைத்த அசதி, அவளைக்
கவிழ்த்தது கீழே கூடல் முகட்டின்
மேலோர் சத்தம் விரிந்தது! மெதுவாய்க்
காதை அழைத்தாள். கண்கள் ஒடின!
"சரசர" என்னும் சத்தம், முடுக்கில்
புடை புடைத்து-நகர்ந்தது! கோதையின்