பக்கம்:சாவின் முத்தம்.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

சாவின் முத்தம்


உள்ளம் இறுதி, உதட்டின் உச்சி,
தள்ளாட் டத்தில் கட்டுத் தளர்ந்திட,
விளக்கைத் தேடும் வஞ்சியின் கரங்கள்
துடைப்பக் கட்டையின் இடுப்பைக் கெளவின!
சிறுசிறு அசைவுகள் பெருக, நினைவுகள்
பலப்பல் விதமாய்ப் படையெடுத் தாடின!
இழைவிளக் கின்றி இடிந்தாள்! குழந்தைகள்
மழையில் நனைந்ததை நெஞ்சில் முடிந்தாள்.


மின்னல் விரிந்தால் விளக்கே வேண்டாம்!
அப்போது வீட்டிற் கதுவும் இல்லை.

மெதுவாய்க் கதவின் வாய்நீக்கி, திண்ணை
விளக்கு மாடத்தில் விழுந்தது அவள்கரம்!
கண்கள் புழங்கின கூண்டில். நெஞ்சம்
எண்ணெய் வர்த்தியில் எழுந்தது! கீழே
கவனிக்க வில்லை. கால்தடு மாறி,
கணவன் மேலே கவிழ்ந்தாள். கணவன்
முணுமுணுத் தெழுந்து “மூதேவி. என்னடி
ஆள்படுத் திருக்கிறேன் அணைந்ததா உன்விழி”
என்று, எரிந்து கொண்டே எழுந்தான்.

“நீங்களா இங்கே நித்திரை இடுவது?
இந்த மழையில் எப்படி வந்து
சேர முடிந்தது? சேற்றில் ஊறிய
எருமைப் பத்தைப்போல் ஒருவண்டி சகதி
இருந்திட மாடுபோல் வருமா தூக்கம்!
எழுங்கள் உடனே! முழுநெருப் பெட்டி
இன்றுதான் வாங்கி எங்கோ தொலைத்தேன்.