பக்கம்:சாவின் முத்தம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


சாவின் முத்தம்

இமை நெறித்து வானத்தில்
    அடுக்கி, கொஞ்சம்
இருள் கிடக்கும் பார்வையிலே
    கோணம் வாங்கி,
சுமைக் குடத் துடன் நடந்து
    மாந்தோப் போரம்
சென்றிட்டாள் நீலவள்ளி !
    வாய் இமைத்து,
“நமை விட்டுப் பிரியாத
    அந்தி நேரம்;
நல்ல இசை; பனித்தென்றல்,
    இருந்தும், காதல்
குமையாத நெஞ்சத் தான்,
    “அத்தான்” இன்னும்
கொத்திட ஏன் வரவில்லை?”
    எனத் துடித்து,

நடை யழுங்க நின்றிட்டாள்.
    மீண்டும் யாழை
நடத்துகின்ற வாய்திருத்தி
    ‘ஆமாம்’ சேரர்
படைத்தலைவன் என் அத்தான்!
    சிரிப்பின் ஆழம்
பார்ப்பதற்கு இது நேரம்
    அல்ல! நேற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவின்_முத்தம்.pdf/7&oldid=1351421" இலிருந்து மீள்விக்கப்பட்டது