பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

அரைமணி நேர அறுவை


"இல்லே ஸார்... எம்.எல்.ஏ-தான் தலைமை தாங்கணும்."

"ஆசை யாரை விட்டுது? உமக்கு பழையபடியும் பிரஸிடென்டா ஆகணும் என்கிற ஆசை. எனக்கு இந்த ஜில்லாவிலேயே இருக்கணுங்கற ஆசை... கலெக்டரே இருந்துட்டுப் போகட்டும்."

"இல்ல... எம்.எல்.ஏ-தான் இருக்கணும்."

வாடாதபட்டித்தலைவர் சமரசம் செய்தார்.

"முன்னிலைன்னு ஒண்ணு இருக்கு... அதை மறந்துட்டிங்களே! எம்.எல்.ஏ-யை முன்னிலைன்னு போட்டுடலாம்."

"அப்புறம் அண்ணன் எம்.பி-க்கு?"

"ஒ...! அவர மறந்துட்டேன். அவரு சிறப்புச் சொற்பொழிவு..."

"பழைய சேர்மனுக்கு என்ன கொடுக்க?"

"அவரு... அமைச்சர் குழாயத் திறக்கும்போது மாலை போடுவாரு"

"குழாய்க்கா..?"

"இல்ல... அமைச்சருக்கு."

"எங்க டிவிஷனல் ஆபீசருக்கு ஏதாவது கொடுங்கய்யா?"

"அவருக்கா... அவரு நன்றியுரை சொல்லிடட்டும்."

"அப்போ நான் ஆணையாளர்னு பதவியிலிருந்து அம்போன்னு இருந்துடனுமா..?"

"வேண்டாம். நீங்க... டி.டி.ஓ. நன்றி சொல்வார்னு அறிவிச்சிடுங்க"

ஆணையாளருக்கு ஒன்று புரிந்தது. ஏப்ரல் முதல் தேதி வருமுன்னாலேயே ஒப்பிலியப்பன் தன்னை முட்டாளாக்கி விட்டார் என்பது. இதை விடக்கூடாது. எப்படியாவது குறுக்குச் சுவரைக் கட்டி, அழைப்பிதழ் அடித்து அமைச்சரிடம் தானே கொடுத்துவிட வேண்டும்.

ஆணையாளர் ஐயப்பன், வாட்டர் போர்டு அதிகாரிகளையும், பி. டபிள்யூ. டி என்ஜினியர்களையும் நாட்கணக்காகச் சந்தித்து காலில் விழாக் குறையாக விழுந்து, மோவாய்களைத் தொடாக் குறையாகத்