பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

வாழ்க்கைப் பாக்கி


இப்பவே எடுத்துட்டுப் போய், அங்கே டிரிப் ஏற்றி.... மூளைக்கு போசாக்குக் கொடுத்தபடியே, இருதயத்த இயக்கிப் பார்க்கலாம்... ஒரு வேளை, பாட்டி பிழைச்சுக்கலாம்... அப்படி பிழைக்க வைக்கிறது சிரமம்தான். ஆனா முடியாதுன்னு இல்ல... வீட்ல ஒரு பெரியவங்க இருக்கிறது நல்லது தானே... என்ன சொல்றீங்க? ணி

எம்மா.. என்னப் பெத்த அம்மாணி...

ராமய்யாவை, டாக்டர் புரிந்து கொண்டார். அம்மாவை வழியனுப்பி வைக்கத் தயாராகி விட்டார். இதுக்கு மேலயும் பேசினால், காசு கரக்கப் பார்ப்பதாக நினைப்பார். நல்லவருக்கு அடையாளம் சொல்லாமல் போகணும். போய்விட்டார்.

கனகம்மா பாட்டிக்கு மகனின் அழுகைச் சத்தம், பாசச் சத்தமாகக் கேட்டது. ஆறுதல் சொல்லுவது போல், அவள் மூளை துடித்தது. அழாதடா.. என் ராசா.. ஆஸ்பத்திரிலே.. அம்மா பிழைச்சுக்குவேண்டாணி...

பிழைக்க நினைத்த பாட்டிக்கு அவள் பிழையை உணர்த்துவது போல், கண்ணில் சிறு வலி. வாயில் ஒரு வாதை, எவரோ... வேறு யாரும் இல்லை. அவள் பெற்ற ராமய்யாவின் கைதான்... அதன் வாசனை அவளுக்குப் புரிகிறது. பஞ்சிலிருந்து இரும்பாவது வரைக்கும், அவள் கழுத்தைச் சுற்றி முத்தமிட்ட கைதான்... அதே கை, தனது விழிகளை இமைகளை இழுத்து நடைசாத்துவது போல் தோன்றியது. அந்த மகனுக்கு ஒத்தாசையாக இன்னோரு கரம். வளையல் குலுங்கும் கிண்கிணி சத்தத்தோடு 'எத்தே... எத்தே' என்று புலம்பியபடியே, வெள்ளையும், சொள்ளையுமாய் தெரிந்த பாட்டியின் வாயை மூடுகிறாள். மரணக் கோரத்தை அழகாக்கிப் பார்க்க நினைத்தார்களோ... அல்லது சின்னஞ்சிறு பிள்ளைகள், பாட்டியை பெண் பூச்சாண்டியாய், பார்த்தும் பயந்தும் படுக்கையில் விழக்கூடாது என்கிற முன்னெச் சரிக்கையோ...

கனகம்மாவிற்கு புரிந்து விட்டது... அவளுக்கு மயக்கலோகம் கலைந்து மரணலோகம் எதிரில் தோன்றியது. 'போக வைக்கும் முன்பே போயாக வேண்டும்'. ஆனாலும் இந்தப் பாழாப் போற மூளை