பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/126

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளித் திரையும்
வீதித் திரையும்


அந்த ரயில் வண்டியின் குளிர்சாதனப் பெட்டியின் வாசலில், அக்னிநாத், உடலைக் காட்டாமல், தலையை மட்டுந்தான் காட்டியிருப்பான். அதற்குள், கூட்டம் அலை அலையாய் மோதியது. ரயில் இரைச்சலை தவிடுபொடியாக்கும் மனித இரைச்சல், கோஷக் கூச்சல்கள். தூங்கி எழுந்ததும் வெளிப்படுமே மிருகச் சத்தங்கள் - அப்படிப்பட்ட பெருஞ் சத்தம். அந்த மாவட்டத் தலைநகரில் சந்து பொந்துகளையும் சாக்கடை மூடிகளையும் கூட விட்டுவைக்காமல், ஒட்டப்பட்ட கட்டப்பட்ட போஸ்டர்களில் காணப்பட்ட

நாடு போற்றும் நாயகனே!
நாளைய முதலமைச்சரே!
இன்றைய இளவரசே!
கனவின் நனவே!
நினவின் கனவே!
முத்தமிழின் முக்காலமே!
முக்காலத்தின் முத்தமிழே!

என்பன போன்ற தெருவாசகங்கள், இப்போது சொல்லிழந்து, பொருளிழந்து, அத்தனைபேர் வாயிலும் கூச்சல்களாய் வெளிப்பட்டன.

நடிப்புச் சக்கரவர்த்தி அக்னிநாத்தை வரவேற்பதற்காக கூட்ட முகப்பில் நின்ற மாநில அக்னிநாத் நற்பணி மன்ற தலைவர் அக்னிதாசன் எம்.ஏ. பில், துணைத் தலைவர்களான அக்னி அடியான் எம்.காம், டாக்டர் அக்னிராஜன், அக்னிதுரை, மாவட்டத் தலைவரான