பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/128

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

வெள்ளித் திரையும், வீதித் திரையும்


அணியும் இழைதழை பேண்ட். அவன் உருவங்களையே பல்வேறு கோணங்களில் டிசைன் செய்த பொம்மைச் சொக்கா...

அக்னிநாத், போலீஸ் பாதுகாப்போடு ரசிகக் கூச்சலோடு நடந்தான். 'பொல்லாதப் பயலுக... இவனுகள நெருங்க விடாதிங்க...' என்று இன்ஸ்பெக்டரிடம் கீழே குனிந்து, அவர் காதுகளில் கிசுகிசுத்துவிட்டு, மீண்டும் தலையை நிமிர்த்தி, ரசிகர்களைப் பார்த்து, தன்பக்கம் வரும்படி கையை ஆட்டினான். இதனால் சில ரசிகர்களை லத்தி, குத்தியது. அவர்களது அம்மாக்களும் அக்காக்களும் வம்புக்கு இழுக்கப்பட்டார்கள். அக்னிநாத், அந்த லத்தித்தனமான வார்த்தைகள், தன் காதில் விழாததுபோல் பராக்குப் பார்த்தபடியே நடந்தான். அந்த ரயில் நிலையத்தின் சிரங்கு பிடித்த சுவர்களில் ஒட்டப்பட்ட தனது பல்வேறு உருவப்படங்களை ரசித்துப் பார்த்தான். கராத்தே அக்னிநாத்... சிலம்பன் அக்னிநாத்... படுக்கையறைக் கில்லாடி அக்னிநாத்... துப்பாக்கி இன்ஸ்பெக்டர் அக்னிநாத்... முரட்டுக் கொள்ளைக்காரன் அக்னிநாத்...

இந்த நிலையத்திற்கு அப்பால், இருபதடி உயரத்திற்குமேல், ஒரு கழுதையின் உயரத்திற்கும் ஒரு பன்றியின் அகலத்திற்குமான 'கட்-அவுட்டை' ரசித்துப் பார்த்தபடியே நடந்தான். ஆனாலும், ஒரு வித்தியாசமான போஸ்டர், அவன் கண்ணை உறுத்தியது. 'எதிர்கால ஆளுநரே... எங்கள் அக்னிநாத்தே' என்ற வாசகத்தோடு, தலையில் கிரீடமும், கையில் செங்கோலுமாய் தோன்றிய தனது உருவத்தைப் பார்த்து, அவன் மூட்-அவுட் ஆகி அப்படியே நின்றான். அந்தச் சமயம் பார்த்து ஒரு துடுக்கான இளைஞர், சில மினுக்கமான மனிதர்களோடு வந்து, லத்திக் கம்பு வளையத்தின் ஒரு பக்கத்தை அலட்சியமாகத் தள்ளியபடியே, உள்ளே போனார். அக்னிநாத்தின் நீட்டப்படாத கைகளை இழுத்துப்பிடித்து ஒரு குலுக்கு குலுக்கியபடியே இப்படிப் பேசினார்.

"நான்... மேக நாதன் ஐ.ஏ.எஸ்.... இந்த மாவட்ட ஆட்சித் தலைவர். மாண்புமிகு அமைச்சர் அற்புதன் அவர்கள், உங்களைப் பார்க்க விரும்புகிறார். அதோ முதலாம் வகுப்புப் பயணிகள் விடுதியில் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுக்கிறார். இந்த மாவட்டத்தில் நடக்கிற ஜாதிக் கலவரங்களைக் கண்டறிந்து, இப்போது விளக்கிக்