பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
XI

கு.அழகிரிசாமியாலும், ஒரு கட்டம் வரை ஜெயகாந்தனாலும், தொடர்ந்து டி.செல்வராஜ் போன்ற படைப்பாளிகளாலும், அந்தப் பாரம்பரியம் உயர்த்தி எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது.

ஆனால், தமிழில் ரகுநாதனால் தொடங்கி வைக்கப்பட்ட சோசலிச யதார்த்தவாத நாவல் இலக்கியம், தொடர்ந்து மேலும் கிளைவிட்டுப்படருவது போல, சிறுகதைத் துறையில் சோசலிச யதார்த்தவாதம் வேர்பிடிக்காமல் இருப்பது துரதிஷ்ட வசமானது என்றே கூறவேண்டும்.

சோசலிச யதார்த்த வாதம் என்றால் என்ன?

ஏஞ்சல், இப்படிக் கூறுகிறார்:

“நடைமுறையில் உள்ள இந்த முதலாளித்துவச் சமூக அமைப்பு என்பது நிரந்தரமானது. மாற்றப் படமுடியாதது என்கிற நூற்றாண்டுக்கால நம்பிக்கையை, ஒரு இலக்கியப் படைப்பானது, இது மாற்றப்படக்கூடியதுதான், நிரந்தரமானது அல்ல என்கிற சிறு சலனத்தை, படிப்பவனின் மனதில் உருவாகுமானால் , அதுவே “SOCIALIST PROBLEM NOVEL".

சிறுகதைத் துறையில், அப்படியான நம்பிக்கை வைக்கும் படைப்புகள் உருவாகி இருக்கின்றனவா என்பது ஐயத்துக்கு உரியதாகவே இருக்கிறது. காரணம், சோசலிச யதார்த்தவாத இலக்கியப் படைப்பென்பது, மக்கள் இலக்கியத்தின் போராட்ட வழியில் ஈடுபாடுகொண்டு கற்றறிவதோடு , கலந்து உணர்வதிலிருந்தே, உருவாகுவதாகும். இதில், கற்றறிவதை விட கலந்துபெறும் உ ணர்வே, மேலானதோர் வெற்றியளிக்கும். இந்தியாவில் இத்துறை வழிப்படைப்புகளை, சிறப்பாக் கொடுத்திருப்பவர்கள் என்று கிஷன் சந்தர், யஷ்பால்,