பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

115


கொடுக்கிற கலை வாழ்வு. இப்போ போனால்தான் சரியான நேரத்திற்குப் போக முடியும்... வாரேன் அத்தான்... இந்தாங்கத்தான் உங்க நகைகளும், புடவையும்...

அக்னிநாத் கூனிக் குறுகி, அந்த அறைக்குள்ளேயே நாட்டப்பட்ட கம்பமாய் நின்றபோது, கயல்விழி அந்த அறையின் பின்வாசல் வழியாக வெளியேறி, வீட்டின் முன்பக்க வழியாய் வந்தாள். வீட்டு வாசலை இருட்டாக்கி மறைத்த, அக்னிநாத்தின் சொகுசு காருக்கருகே நிறுத்தி வைக்கப்பட்ட தனது சைக்கிளை உருட்டினாள்.


குமுதம் - செப்டம்பர், 1999