பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

XII

மணிக் பந்தோ பாத்யாயா, தகழி ஆகியோரைக் குறிப்பிடலாம்.

அறநெறிச் சீற்றம்

இந்தியாவின் எந்தப் பகுதியிலாவது, மக்கள் இயக்கத்தின் போராட்ட எழுச்சியோ, மதக்கலவரத்தின் மனிதநேய அழிவோ, ஆளும் வர்க்கத்தின் அரசு யந்திரத்தின் வன்மத் தாக்குதலுக்குள்ளாகி, மக்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டு, கொடுமைக்காளாகும் சம்பவங்கள் நிகழ்ந்தால், இந்தப் படைப்பாளிகள் நேரில் சென்று இரண்டறக் கலந்து கொள்வார்கள். இந்த உணர்வுகளிலிருந்து, அவர்கள் பெறும் அறநெறிச் சீற்றத்தின் மூலம், அநியாயத்திற்கெதிரான மக்களின் போராட்ட எழுச்சிக்கு, சிறுகதை இலக்கியம் என்ற ஆயுதத்தை, அனுபவப்பட்டரையின் வாயிலாகக் கூர்மைப்படுத்திக் கொடுக்கிறார்கள்.

இப்படியான அனுபவங்கள், நம் தமிழ் மண்ணில் எவ்வளவு நிகழ்ந்திருக் கின்றன? சிறுகதைப் படைப்பாளிகள் யாரேனும் அக்கரைகாட்டி, மக்களின் ஒன்றுபட்ட போராட்ட உணர்வுகளான உந்து சக்தியை உருவாக்கிட முனைந்திருக்கிறார்களா? ஏதேனும் நடந்திருப்பின், வெற்றி கண்டுள்ளார்களா? அப்படியான வெற்றிப்படைப்புகள், என் கவனத்தில் படவில்லை. அப்படி என் கவனத்துக்கு மீறி வெளிப்பட்டிருப்பின் அவர்கள் இதன் முன்னோடிகள் வாழ்த்துக்கு உரியவர்கள்.

இப்போது தோழர் சமுத்திரம் அவர்களின் கதைகளுக்கு வருவோம்:

இவரின் கதைகள் அனைத்தும், துன்பப்படும் ஏழை மக்களைப் பற்றியும், அதிகார வர்க்கத்தின் கெடுபிடிக்குள் சிக்கித் தவித்து வதைபடும் அரசு